images

Fashion Valetடில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது

image

Fashion Valetடில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது

கோலாலம்பூர்:

ஃபேஷன் வேலட்டில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது.

பிஎன்பி, கஸானா நேஷனல் ஆகியவை ஃபேஷன் வேலட்டில் முதலீடு செய்துள்ளன.

கிட்டத்தட்ட 43.9 மில்லியன் ரிங்கிட்டை அந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களும் பதிவு செய்த நஷ்டத்தின் அளவு அதிகமாக உள்ளது.

ஆக அந்த முதலீடு பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதாலும் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது.

விசாரணையின் தற்போதைய கவனம் முதலீட்டில் நிதி மேலாண்மை, வணிகத்தில் ஊழலின் கூறுகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset