images

Samsung Electronics நிறுவனம் ஆட்குறைப்பு 

image

Samsung Electronics நிறுவனம் ஆட்குறைப்பு 

சென்னை:

Samsung Electronics நிறுவனம் இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மெதுவடைந்திருக்கும் வியாபார வளர்ச்சி, நலிவடைந்து வரும் வாடிக்கையாளர் தேவை ஆகியவை அந்த முடிவுக்குக் காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் அதன் வெளிநாட்டு மனிதவளத்தில்
30 விழுக்காட்டைக் குறைக்கப்போவதாக வந்திருக்கும் தகவல்களுக்கு இடையில் ஆட்குறைப்புச் செய்தி வந்துள்ளது.

கைத்தொலைபேசி, மின்னியல், வீட்டு சாதனப் பிரிவுகளில் உள்ளவர்கள் இந்தியாவில் ஆட்குறைப்புச் செய்யப்படுவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆர்யன்

பகிர்
+ - reset