மலேசியாவின் மலிவு விலை இணைய சேவையை வேபர் மேயர் நிறுவனம் வழங்குகிறது: தலைமை இயக்குநர் லெஸ்லி டேவிட்
மலேசியாவின் மலிவு விலை இணைய சேவையை வேபர் மேயர் நிறுவனம் வழங்குகிறது: தலைமை இயக்குநர் லெஸ்லி டேவிட்
கோலாலம்பூர்:
மலேசியாவின் மலிவு விலை இணைய சேவையை வேபர் மேயர் நிறுவனம் வழங்குகிறது.
இதனை வேபர் மேயர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் லெஸ்லி டேவிட் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் ஃபைபர் இணைய சேவையை வழங்கும் நிறுவனமாக வேபர் மேயர் விளங்கி வருகிறது.
மிகக் குறைந்த விலையில் இந்த சேவையை நாங்கள் வழங்கி வருகிறோம்.
வாடிக்கையாளர்களின் ஆதரவைத் தொடர்ந்து எளிய இணையம் என்ற புதிய திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்.
ஒரு நாளைக்கு 5 ரிங்கிட், வாரத்திற்கு வாரத்திற்கு 20 ரிங்கிட், மாதத்திற்கு 50 ரிங்கிட் என வேபர் மேயரின் இணைய சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
பி40 வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த மலிவு விலையில் இணைய சேவை வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
வேபர் மேயர் நிறுவனத்தின் இணைய சேவை கிள்ளான் பள்ளத்தாக்கில் பரவலாக கிடைக்கும்.
கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட கட்டடங்களில் வேபர் மேயர் நிறுவனத்தின் இணைய சேவைகள் கிடைக்கும்.
விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் எங்களின் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று லெஸ்லி டேவிட் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

