விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார் இந்தியர்
விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார் இந்தியர்
வாஷிங்டன்:
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெகாஸின் நிறுவனம் மூலம், ஆந்திரத்தைச் சேர்ந்த கோபி தோட்டக்குரா விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல உள்ளார்.
7ஆவது முறையாக மனிதர்களை விண்கலன் மூலம் விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இதற்காக 6 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த கோபி தோட்டக்குரா என்பவரும் ஒருவர்.
இவர் அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தில் உள்ள ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றுள்ளார்.
- ஆர்யன்

