DEEP FAKE தொழில்நுட்ப போலிகளை தடுக்க YOUTUBE நடவடிக்கை
DEEP FAKE தொழில்நுட்ப போலிகளை தடுக்க YOUTUBE நடவடிக்கை
புது டெல்லி:
யூடியூபில் பதிவேற்றப்படும் காணொலிகளில் உண்மையான படங்கள் உள்ளதா அல்லது மாற்றம் செய்யப்பட்ட படங்கள் உள்ளதா என அந்தக் காணொலியை பதிவிடும் நபர்கள் தெரிவிக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
DEEP FAKE தொழில்நுட்பம் மூலம் போலியான காணொலிகள் பதிவிடப்படுவதை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கூகுள் வெளியிட்ட அறிவிக்கையில், வரும் காலங்களில் யூடியூப் தளத்தில் பதிவிடும் காணொலிகளில் உண்மைத்தன்மையுடையதா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக காணொலியின் முகப்பில் விளக்கப்பட வேண்டும்.

AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் அதை காணொலியின் முகப்பில் பதிவிட வேண்டும்.
இந்திய அரசுடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகளை தடுப்பதில் கூகுள் உறுதியாக உள்ளது. இதற்காக மெட்ராஸ் ஐஐடியுடன் இணைந்து நாட்டிலேயே முதல் ஏஐ தொழில்நுட்ப மையத்தை நிறுவ 1 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்

