images

இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவை

image

இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவை

புது டெல்லி:

இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையை கூகுள் நிறுவனம் தொடங்கி உள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள சென்சார்களைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கண்டறிந்து விடலாம்.

இதன்மூலம், இந்திய ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும்போது முன்னறிவிப்பு எச்சரிக்கையை ஸ்மார்ட் போனில் பெறலாம்.

பல அறிதிறன்பேசிகள் ஒரே நேரத்தில் நிலநடுக்க அதிர்வுகளைக் கண்டறிந்தால்,  இந்தத் தகவலைப் பயன்படுத்தி நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்றும், அத்துடன் நிலநடுக்கத்தின் இயல்புகளான  மையப்பகுதி மற்றும் அளவு போன்றவையும் எங்களின் சர்வர்கள் மதிப்பிடும்.

பின்னர், அப்பகுதியிலுள்ள அறிதிறன்பேசிகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

பகிர்
+ - reset