நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
டோக்கியோ:
நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக எக்ஸ்ரே தொலைநோக்கியுடன் கூடிய விண்கலம் மற்றும் லேண்டரை ஜப்பான் விண்ணில் செலுத்தியது.
ஹெச்ஐஐஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்கலம், வெற்றிகரமாக அதன் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
சுமார் 6 மாத பயணத்துக்கு பிறகு நிலை இந்த விண்கலம் சென்றடையும்.
அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள லேண்டருக்கு "ஸ்லிம்' (ஸ்மார்ட் லேண்டர் ஃபாரர் இன்வெஸ்டிகேட்டிங் மூன்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியா செலுத்திய சந்திரயான் -2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்

