12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
சிப்பாங் :
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் ஒன்று அவரசமாக மலேசியாவில் தரையிறங்கியது.
எமிரேட்ஸ் விமானம் துபாயிலிருந்து சிங்கப்பூரை நோக்கி வந்தது.
அதிகாலையில் மலேசிய வான் பகுதியை அவ்விமானம் கடக்கும் போது மோசமான் வானிலை காரணமான அவ்விமானம் அவரசமாக மலேசியாவில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய அவ்விமானத்தில் இருந்தவர்கள் வெளியே வர அனுமதிக்கவில்லை.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் அவர்கள் விமானத்தில் இருந்தனர். அதன் பின் அவ்விமானம் சிங்கப்பூரை நோக்கி பயணித்தது.
மலேசியா, இஸ்ரேயில் இடையே உறவு இல்லாத நிலையில் அவர்கள் பயணித்த விமானம் இங்கு தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே வேளையில் இந்த விவகாரத்திற்கு எம்ரேட்ஸ் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்

