சந்திரயான் டூடுல்: கூகுள் கொண்டாட்டம்
சந்திரயான் டூடுல்: கூகுள் கொண்டாட்டம்
புது டெல்லி:
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற வெற்றியைக் கொண்டாட கூகுள் டூடுல் வெளியிட்டது.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் திட்டமிட்டபடி புதன்கிழமை வெற்றிகரமாகத் தரையிறங்கி ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
குறைந்த செலவில், 2ஆவது முயற்சியில் இஸ்ரோ சாதித்துக் காட்டியுள்ள இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் உத்வேகத்தையும் அளித்திருக்கிறது.
இதைக் கொண்டாடும் விதமாக சிறப்பு டூடுல் ஒன்றை கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வெளிட்டது.
இந்தச் சிறப்பு டூடூல் தொடர்பாக கூகுள் வெளியிட்ட குறிப்பில்,இன்றைய டூடுல் நிலவின் தென் துருவத்தில் முதன் முதலாக விண்கலம் தரையிறங்கியதைக் கொண்டாடுகிறது என்று கூகுள் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்

