புற்றுநோய் சிகிச்சை குறித்த தவறான விடியோக்களை நீக்க யூடியூப் முடிவு
புற்றுநோய் சிகிச்சை குறித்த தவறான விடியோக்களை நீக்க யூடியூப் முடிவு
புது டெல்லி:
புற்றுநோய் சிகிச்சை குறித்து தவறான தகவல்களை அளிக்கும் விடியோக்களை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புற்றுநோய்க்கான சிகிச்சை ஆபத்தானது; பலனற்றது' என்ற கருத்தை ஊக்குவிக்கும் விடியோக்கள் மீது ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, "புற்றுநோயை பூண்டு குணப்படுத்தும்', "கதிரியக்க சிகிச்சைக்கு பதில் வைட்டமின் சி எடுத்துக் கொள்ளுங்கள்' என்பது போன்ற விடியோக்கள் நீக்கப்படும்.
குறிப்பிட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளை விவாதிப்பது உள்ளிட்ட சில விடியோக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று யூடியூப் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்

