IRCTC பெயரில் போலி செயலிகள்
IRCTC பெயரில் போலி செயலிகள்
புது டெல்லி:
IRCTC rail connect என்ற பெயரில் போலி கைப்பேசி செயலிகள் புழக்கத்தில் உள்ளதாக இந்திய ரயில்வேயின் IRCTC எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து IRCTC வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடும் நோக்கில் "ஐஆர்சிடிஇ ரயில் கனெக்ட்' பெயரில் போலி கைப்பேசி செயலிகளை சிலர் புழக்கத்தில் விட்டிருப்பதாகவும், அதில் அதிக எண்ணிக்கையில் இணைய தொடர்பு முகவரிகளை அனுப்பி அதனைப் பதிவிறக்கம் செய்யுமாறு வாடிக்கையாளர்கள் வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதில் வாடிக்கையாளர்கள் சிக்கிவிடாமல், "கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் செயலிகள் ஸ்டோர்' வலைதளங்களிலிருந்து அதிகாரபூர்வ செயலியை மட்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்

