இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழப்பு
டார்ஜிலிங்:
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்தனர்.
கனமழை காரணமாக சிலிகுரி - டார்ஜிலிங் நெடுஞ்சாலையில் உள்ள தூதியா இரும்புப் பாலம் உடைந்து விழுந்தது.
தூதியா ஆற்றில் கட்டப்பட்ட இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூதியா ஆற்றின் கரையோரம் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
ஜல்பைகுரி, சிலிகுரி, கூபிகார், கலிம்பாங், அலிபுர்தார் பகுதிகளில் பலத்த மழையால் பலர் உயிரிழந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

