மலேசியாவின் எதிர்கால ஹாக்கி சாம்பியன்களை உருவாக்கும் தலையாய பணியில் இறங்கியுள்ளார் பயிற்றுநர் காளிதாஸ்
மலேசியாவின் எதிர்கால ஹாக்கி சாம்பியன்களை உருவாக்கும் தலையாய பணியில் இறங்கியுள்ளார் பயிற்றுநர் காளிதாஸ்
மலாக்கா:
ஒரு ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஹாக்கி மேம்பாட்டு மையம் வரை, ஸ்டார் ஹாக்கி அகாடமி மலேசியாவின் மிகவும் வெற்றிகரமான அடிமட்ட திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அணிகளுக்கு ஆயிரக்கணக்கான பன்முகம் திறன் கொண்ட வீரர்களை உருவாக்கியுள்ளார் ஆசிரியரும் பயிற்றுனருமான காளிதாஸ்.
செமினி ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியரான காளிதாஸ் 2015 ஆம் ஆண்டு ஸ்டார் அகாடமியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
ஹாக்கி போட்டியில் நமது இந்திய மாணவர்களை முறையே பயிற்றுவித்து உலக அரங்கில் அவர்களை மிளிரவைக்கும் தார்மீக பொறுப்பினை தமது தோள்மீது சுமந்து வருகிறார் ஆசிரியர் காளிதாஸ்.
மாணவர்களுடைய பின்னணியைப் பொருட்படுத்தாமல் இளம் திறமையாளர்களுக்கு கட்டமைக்கப்பட்ட, உயர்தர பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்கான எளிய பயனுள்ள நோக்கத்துடன் நிறுவப்பட்டதே இந்த அகாடமி என்கிறார் காளிதாஸ்.
2024 ஆம் ஆண்டில், அகாடமியின் போட்டியாளரும் ரிஞ்சிங் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவருமான ஈஸ்வரன் ஜார்ஜ், ஜூனியர் உலகக் கோப்பையில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஒரு வரலாற்று தருணத்தை ஏற்படுத்தினார்.
ஜூனியர் உலகக் கோப்பைக்காக இந்தியா சென்னையில் ஈஸ்வரன் மீண்டும் தேசிய ஜெர்சியை அணிவார் என்று நம்பப்படுகிறது. சீனாவின் டாஜோவில் நடைபெற்ற AHF U-18 ஆசிய கோப்பையில் மலேசியா வெண்கலப் பதக்கம் வெல்ல உதவுவதில், அகாடமியின் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தனேஷ் முனியாண்டி மற்றும் தீரீஸ் குணசீலன் ஆகிய இரு சிறந்த வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
மலேசியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் ஹாக்கி திறமையாளர்களில் ஒருவரான சந்தோஷ் நகுலனும் தனித்து நின்றார். பல்வேறு அடிமட்டப் போட்டிகளில் சந்தோஷ் ஆண்டின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
மேலும் ஒரு அற்புதமான சாதனையில், அவர் MSSM ஆண்டின் சிறந்த வீரர் விருதையும், சிறந்த மதிப்பெண் பெற்றவர் விருதையும் வென்றார்.
இதன் மூலம் அவரை 12 வயதுக்குட்பட்ட மலேசியாவின் சிறந்த வீரராக உருவாக்கினார்.
தற்போது மலேசியாவின் மிகவும் மதிப்புமிக்க தேசிய விளையாட்டுப் பள்ளியான புக்கிட் ஜாலில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பாற்பட்டு பல ஆண்டுகளாக ஆசிரியர் காளிதாஸ் அவர்களின் அயராத முயற்சியால், தாஷ்விந்திரன், தேஷ்விந்திரன், தானேஷ், யுகேஷ் மற்றும் யோகேஷ் உள்ளிட்ட பல ஸ்டார் ஹாக்கி தயாரிப்புகளை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.பல அடிமட்ட வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், மலேசியாவில் வடிவமைக்கப்பட்ட ஹாக்கி பாதையில் அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதையும் உறுதி செய்கிறார்.
ஹாக்கியின் அடிப்படை முதல் உயர் செயல்திறன் மற்றும் நுட்பங்கள் வரை அனைத்தும் விரிவாகக் கற்பிக்கப்படுகின்றன. இன்று, அகாடமியில் 200 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு, அடிமட்டத்திலிருந்து உயர் செயல்திறன் நிலைகள் வரை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 60 க்கும் மேற்பட்ட வீரர்கள் மாவட்ட மற்றும் தேசிய அணிகளில் இடம்பிடித்துள்ளனர் என்ற சாதனைகள் பலவழிகளில் முறியடிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்

