images

BYD மின்-வாகன விற்பனை சரிவு

image

BYD மின்-வாகன விற்பனை சரிவு

பீஜிங்:

சீனக் கார் நிறுவனமான BYD-இன் விற்பனை 19 மாதங்களில் முதன்முறையாகக் குறைந்திருக்கிறது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மையால் BYD மின்-வாகனங்களின் மாதாந்தர விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளது.

கடந்த மாதம் மட்டும் அதன் விற்பனை 5.5 விழுக்காடு சரிந்தது.

2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் BYD மின்-வாகன விற்பனை சூடுபிடித்தது.

இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் அதன் விற்பனை 18 விழுக்காடு ஏற்றங்கண்டது. சுமார் 3.2 மில்லியன் மின்-வாகனங்களை நிறுவனம் விற்றது.

விற்பனையை அப்படியே வைத்துக்கொள்ள சில நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் விலையைக் குறைப்பதுண்டு. அல்லது சலுகைகள் வழங்குவதுண்டு. 

அத்தகைய போக்கை முடிவுக்குக் கொண்டுவரும்படி சீன அரசாங்கம் கார் நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

இது BYD உட்பட பல நிறுவனங்களுக்குச் சிக்கலாக உள்ளது.

பெரிய அளவிலான சலுகைகள் வழங்காமல் விற்பனையை நிலையாய் வைத்துக்கொள்ள அவை சிரமப்படுகின்றன.

- ஆர்யன்

பகிர்
+ - reset