5 ஆண்டுகளுக்கு பிறகு 26-ஆம் தேதி முதல் இந்தியா - சீனா நேரடி விமான சேவை
புது டெல்லி:
கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா - சீனா நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 -ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
2020ம் ஆண்டு கொரோனா பரவலால் சீனாவுடனான விமான சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர் கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இருநாடுகளுக்கும் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் இந்தியா, சீனாவுக்கு இடையேயான நட்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இம் மாத இறுதியில் சீனாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இதையடுத்து, மேற்குவங்கத்திலிருந்து வரும் 26ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் காங்க்சவ்வுக்கு முதல் விமானத்தை இயங்குவதாக அறிவித்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

