ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
கோலாலம்பூர்:
சென்ஹெங் நியூ ரீடெய்ல் பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குநரான ஐரீன் ஓமார், ஒரு வருடத்திற்கும் மேலாகப் பதவி வகித்த பின்னர் ராஜினாமா செய்துள்ளார்.
இன்று புர்சா மலேசியாவிடம் சென்ஹெங் தாக்கல் செய்த அறிக்கையில், தனிப்பட்ட கடமைகள் காரணமாக ஐரீன் உடனடியாக ராஜினாமா செய்ததாக கூறியது.
அதே நேரத்தில், நியமனம், ஊதியம், தணிக்கைக் குழுக்களின் உறுப்பினர் பதவியையும் அவர் துறந்தார்.
2024 ஆண்டு அறிக்கையின்படி, ஐரீன் 2024ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதியன்று நிறுவனத்தில் ஒரு சுயாதீன, நிர்வாகமற்ற இயக்குநராக சேர்ந்தார்.
ஐரீன் தற்போது பிக்பே, பிக்லைஃப் ஆகியவற்றின் குழு தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
இவை இரண்டும் முன்பு ஏர்ஏசியா குரூப் பிஎச்டி என்று அழைக்கப்பட்ட கேபிடல் ஏ பிஎச்டியின் துணை நிறுவனங்களாகும்.
- பார்த்திபன் நாகராஜன்

