சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்க் காவல்துறை செயற்கை நுண்ணறிவில் இயங்கும் புதிய தானியக்க உரையாடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் அதைப் பயன்படுத்தலாம்.
புகாரளிக்க உதவும் தானியக்கச் செயற்கை நுண்ணறிவு உரையாடல் வசதி R-COP.
- அங் மோ கியோ
- பிடோக்
- மத்திய காவல்துறைப் பிரிவு
- கிளமெண்டி
- ஜூரோங்
- தங்ளின்
- உட்லண்ட்ஸ் ஆகிய 7 காவல்துறைத் தலைமையகங்களில் அந்த வசதி இருக்கும்.
புகார் அளிக்க 9 சுய உதவி இயந்திரங்கள் அந்தத் தலைமையகங்களில் உள்ளன. அவற்றில் தானியக்க உரையாடல் வசதி பொருத்தப்பட்டிருக்கும்.
தற்போது சுயமாகப் புகாரளிக்கும்போது மக்கள் தெரியாமல் சில முக்கியத் தகவல்களை வழங்கத் தவறலாம். அதைத் தவிர்க்க R-COP உரையாடல் வசதி உதவும்.
புகாருக்கு ஏற்ப எந்தெந்த முக்கியத் தகவல்களை வழங்கவேண்டும் என்பதை அது எடுத்துரைக்கும். எளிதாகப் புரியவைக்க சில மாதிரிப் புகார்களையும் அது காட்டும்.
புகாரை எழுதி முடித்தவுடன் அது காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்.
CNA செய்தியாளர்கள் அந்த வசதியைச் சோதித்தபோது புகார் மனுவில் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்தும் ஆற்றலும் அதற்கு இருப்பது தெரியவந்தது.
இருப்பினும், இது புதிய தொழில்நுட்பம் என்பதால் புகார்களைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதிலுள்ள விவரங்களைக் கவனமாகச் சோதிக்கவேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியது.
ஆதாரம்: CNA

