images

தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது

image

தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது

கோலாலம்பூர்:

இன்று தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) - 3,536.56 டாலருக்கு விற்பனை ஆனது.

ஏப்ரல் மாதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அமெரிக்காவில் சுமார் $3,081.30 முதல் $3,424.41 வரையிலும், மலேசியாவில் சுமார் RM 14,564.36 முதல் RM 15,931.00 வரையிலும் விலைகள் இருந்தன.

இன்று காலை 11 மணி நிலவரப்படி கோலாலம்பூர் நகைக் கடைகளில் ஒரு கிராம் 916 ஆபரணத்  தங்கத்தின் விலை சுமார் 463 வெள்ளியைத் தொட்டது.

அமெரிக்க வரிகள், அமெரிக்க மத்திய வங்கி ஆளுநர் லீசா குக்கைப் (Lisa Cook) பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிபர் டிரம்ப்பின் முயற்சி ஆகியவற்றால் மீண்டும் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் முதலீட்டாளர்கள் அதிகமானோர் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதுகின்றனர்.

தங்க விலை உயர்ந்திருப்பதற்கு அது முக்கிய காரணம் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

- ஃபிதா 

பகிர்
+ - reset