நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
வாஷிங்டன்:
நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை 2030க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை நாசா விரைவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் தளம் உருவாக்கப்படும்.
இது குறித்து அந்த நாட்டில் வெளியாகும் பொலிடிகோ செய்தித்தாளில், சீனாவும் ரஷியாவும் இதேபோன்ற திட்டங்களை வைத்திருப்பதாகவும், அவர்கள் நிலவில் மற்ற நாடுகள் நிலவில் நுழைய தடை செய்யப்பட்ட பகுதியை அறிவிக்கலாம் என்று நாசாவின் தற்காலிக தலைவர் அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷான் டஃபி தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமமாகும். இரண்டு வாரங்கள் தொடர்ச்சியான வெயிலும், இரண்டு வாரங்கள் இருளும் கொண்டது.
இதனால், சூரிய மின்சக்தியில் மட்டும் நம்பி தங்க வைக்க முடியாது.
சூரிய மின்சாரம் மற்றும் பேட்டரிகளால் மட்டும் இதை பூர்த்தி செய்ய முடியாது.
ஆகையால் நிலவில் அணு மின் நிலையத்தை அமைப்பது அவசியமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்

