images

செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்

image

செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

செயற்கை நுண்ணறிவு தேசமாக மாறுவதை மலேசியா இலக்காகக் கொண்டுள்ளது.

இதனால் நிலையான இலக்கவியல் மாற்றத்தை மேம்படுத்தப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

சிறந்த நிர்வாகத்தை மேம்படுத்தவும், இலக்கவியல் மாற்றம் நிலையான உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை இயக்குவதை மலேசியா உறுதி செய்யும்.

மேலும் மலேசியா ஒரு செயற்கை நுண்ணறிவு நாடாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றங்களிலிருந்து சமூகத்தின் ஒவ்வொரு மட்டமும் பயனடைவதை உறுதி செய்வதற்காக செயறகை  நுண்ணறிவு தேசிய கட்டமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுதேசிய கட்டமைப்பில் ஐந்து வலுவான தூண்கள் உள்ளன.

அதாவது எதிர்காலக் கொள்கைகள், டிஜிட்டல் ரீதியாக சுறுசுறுப்பான, சரளமான பணியாளர், நம்பகமான, பாதுகாப்பான இலக்கவியல் உள்கட்டமைப்பு, இலக்கவியல் முன்னேற்றத்தில் நம்பிக்கையான முதலீடுகளை மலேசியா கொண்டுள்ளது.

இந்தத் தூண்கள் அனைத்தும் செயற்கை  நுண்ணறிவை மேம்படுத்தும் பொருளாதாரக் கட்டமைப்பை இயக்கும்.

இன்று மைடேக்கில் நடைபெற்ற ஆசியான் செயற்கை நுண்ணறிவு உச்ச நிலை மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset