images

நிலைத்தன்மையின்  தூணாகவும், வளர்ச்சிக்கான வழிகாட்டியாகவும் ஆசியான் - ஜிசிசி உயர வேண்டும்: பிரதமர்

image

நிலைத்தன்மையின்  தூணாகவும், வளர்ச்சிக்கான வழிகாட்டியாகவும் ஆசியான் - ஜிசிசி உயர வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நிலைத்தன்மையின் தூணாகவும், வளர்ச்சிக்கான வழிகாட்டியாகவும் ஆசியான் - ஜிசிசி உயர வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு வாரியமும் இணைந்து, எதிர்கால வளர்ச்சிக்கான நிலைத்தன்மையின் தூணாகவும், ஒரு  வழிகாட்டியாக உடர வேண்டும்.

குறிப்பாக அதற்கான திறனையும் பொறுப்பையும் அது கொண்டுள்ளது.

பொருளாதாரம், இயக்கவியல் அடிப்படையில் மிகவும் அமைதியான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வட்டாரமாக ஆசியானின் நிலையை இது கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

அதே நேரத்தில் ஜிசிசி ஒரு இருண்ட பாலைவன கலாச்சாரத்திலிருந்து இப்போது துடிப்பான, ஆற்றல் நிறைந்த,  பொருளாதார ரீதியாக முன்னேறியது.

சமீபத்திய தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு முன்னுதாரண மாற்றத்தை செயல்படுத்துகிறது.

வலுவான ஆசியான் - ஜிசிசி உறவுகள் வட்டாரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மீள்தன்மையை உருவாக்குவதற்கும், இரு வட்டார மக்களுக்கும் நிலையான செழிப்பை உறுதி செய்வதற்கும் முக்கியமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset