இளைஞர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கியமான கட்டமைப்பாக ஆசியான் இளைஞர் செயல் திட்டம் உள்ளது: பிரதமர்
இளைஞர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கியமான கட்டமைப்பாக ஆசியான் இளைஞர் செயல் திட்டம் உள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
ஆசியான் இளைஞர் செயல் திட்டம், குழுவால் எழுப்பப்படும் பிரச்சினைகள், கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கியமான கட்டமைப்பாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
இளைஞர் பிரச்சினைகள் தொடர்பான ஒவ்வொரு அறிக்கையையும் தாம் கவனத்தில் கொண்டுள்ளேன்.
அதில் அந்தக் குழு அவர்கள் தொடர்பான இன்னும் முக்கியமான பிரச்சினைகளை முன்வைக்கத் தயாராக இருப்பதாக விவரித்தார்.
நிதி ஸ்திரத்தன்மை, சமூக நலன், சுகாதாரம், நிலையான பொருளாதாரம் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
இதனால் அவர்களின் கருத்துக்களைக் கூறுவதற்கும் அர்த்தமுள்ள பங்கை வகிப்பதற்கும் அவர்களின் திறனை எடுத்துக் காட்டுகிறது.
எனவே, இளைஞர்களுக்கான இந்த ஆசியான் வேலைத் திட்டம், இந்தப் பிரச்சினைகள் மற்றும் கவலைகள் பலவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்க முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

