images

இந்திய ஒலிம்பிக் அணிச் சீருடை, இந்தியாவின் நெசவுப் பண்பாட்டை இழிவுபடுத்துவதாக உள்ளது: கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது இந்தியச் சீருடை

image

இந்திய ஒலிம்பிக் அணிச் சீருடை, இந்தியாவின் நெசவுப் பண்பாட்டை இழிவுபடுத்துவதாக உள்ளது: கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது இந்தியச் சீருடை

பாரிஸ்:

இந்திய ஒலிம்பிக் அணிச் சீருடை, இந்தியாவின் நெசவுப் பண்பாட்டை இழிவுபடுத்துவதாகக் கடும் விமர்சனங்களைச் சந்திக்கிறது.

தேசியக் கொடியில் இருக்கும் மூன்று நிறங்கள் வரும்படி இக்கட் டிசைனை டிஜிட்டல் பிரிண்ட் செய்து இச்சீருடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இதை வடிவமைத்த தருண் தஹிலியானி “முன்னேப்போதும் இல்லாத வகையில் பண்பாட்டையும் நவீனத்தையும் இணைந்து வடிவமைத்துள்ளோம்” என்று கருத்து தெரிவித்தார். இணையம் வாழ் மக்கள் கடுப்பாகிவிட்டனர்.

ஆந்திரா, குஜராத், ஒடிஷா மாநிலங்களின் சிறப்பு மிக்க அடையாளம் இக்கட். தனித்துவமான நெசவு முறையை இழிவுபடுத்தும் வகையில் அதை டிஜிட்டல் பிரிண்ட் செய்திருக்கிறார்கள். அச்சு என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பலவிதமான பிளாக் பிரிண்ட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான நெசவு, எம்பிராய்டரி, அச்சு வேலைப்பாடுகள் அடையாளமாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றைக் கூடப் பயன்படுத்தவில்லை.

நிறம், வடிவமைப்பு எதிலும் நவீனமும் இல்லை. பள்ளிக் கூட ஆண்டு விழாவில் சிறுவர்கள் அணியும் ஆடையைப் போல இருக்கிறது என்றெல்லாம் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியக் கொடியை ஏந்தி நடந்த பிவி சிந்து எதை உடுத்தினாலும் அழகாகத்தான் இருக்கிறது.

#Paris2024 #indiaatparisolympics2024 #PVSindhu

- கோகிலா பாபு

பகிர்
+ - reset