images

ரொனால்டோவின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த 19 வயது துருக்கி வீரர்

image

ரொனால்டோவின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த 19 வயது துருக்கி வீரர்

முனிச்:

யூரோ 2024 தொடரில் துருக்கியே வீரர் அர்டா குலர் அடித்த கோல் மூலம் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார். 

நடப்பு யூரோ 2024 கால்பந்து தொடரில் துருக்கி,  ஜார்ஜியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியா அணியை வீழ்த்தியது. 

துருக்கி தரப்பில் மெர்ட் முல்டுர் (25), அர்டா குலர் (65),முஹம்மத் கெரெம் (90+7) கோல் அடித்தனர். 

இதில் அர்டா குலர்  அடித்த கோல் மூலம், இளம் வயதில் யூரோ கிண்ண தொடரில் கோல் அடித்த வீரர் எனும் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.  

கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 வயது 128 நாட்களில் கோல் அடித்த நிலையில், அர்டா குலர் 19 வயது 114 நாட்களில் கோல் அடித்துள்ளார்.

அர்டா குலர் 2019ஆம் ஆண்டில் துருக்கி கிண்ண போட்டியில் பெனார்பாயி அணி வெல்ல உதவியதுடன், சிறந்த வீரர் விருதையும் பெற்றார்.

பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset