அரஃபாவில் மலேசிய இந்திய முஸ்லிம் காலமானார்
மக்கா:
மலேசியாவிலிருந்து சென்ற தமிழ் முஸ்லிம் குழுவில் இடம் பெற்றிருந்த சாதிக் பாட்சா பின் அப்துல் கரீம் இன்று அரஃபாவில் காலமானார்.
அம்பாங்கில் வசித்து வந்த சாதிக் பாட்சா, ஃபாத்திமா கவுஸ் உணவகக் குழுமத்தின் உரிமையாளர் ஆவார்.
அவரது குழுவைச் சேர்ந்த கோலசிலங்கூர் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் டத்தோ காசிம் அலியா இந்தத் தகவலை மக்காவிலிருந்து உறுதிப்படுத்தி உள்ளார்.
அரஃபா பெருவெளியில் அவர் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்ததாக காசிம் அலியா கூறினார்.
- ஃபிதா

