பாரா ஒலிம்பிக்: நீளம் தாண்டுதலில் அப்துல் லத்தீஃப் மலேசியாவுக்கு மூன்றாவது தங்கத்தை வென்றெடுத்தார்
பாரா ஒலிம்பிக்: நீளம் தாண்டுதலில் அப்துல் லத்தீஃப் மலேசியாவுக்கு மூன்றாவது தங்கத்தை வென்றெடுத்தார்
டோக்கியோ:
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் தனது இரண்டாவது பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று தடகள அரங்கில் மலேசியாவின் அப்துல் லத்தீப் ரோம்லி இன்று அதிரடி காட்டினார்.
பெர்லிஸைச் சேர்ந்த அப்துல் லத்தீப், 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் மலேசியாவின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை தனது முதல் தாவலில் அவர் 7.26 மீட்டர் தூரம் தாண்டி அவர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், அந்த தூரம் அப்துல் லத்தீஃபுக்கு திருப்தி ஏற்படுத்தவில்லை. அவர் தனது இரண்டாவது முயற்சியில் 7.45 மீட்டர் தூரம் தாண்டி இதர போட்டியாளர்களை பின்வாங்க வைத்தார்.
24 வயதான இவர், ரியோ 2016 இல் 7.60 மீ பாராலிம்பிக் சாதனை படைத்துள்ளார், காயம் காரணமாக தனது ஐந்தாவது முயற்சியில் 5.56 மீட்டர் மட்டுமே அவரால் தாண்ட முடிந்தது.

கிரேக்கத்தின் அதனாசியோஸ் ப்ரோட்ரோமோ 7.17 மீட்டர் பாய்ச்சலுடன் வெள்ளி வென்றார். ஆஸ்திரேலிய நிக்கோலஸ் ஹம் 7.12 மீட்டர் தாண்டி வெண்கலத்தை வென்றார்.
அப்துல் லத்தீஃப்பின் வெற்றியின் மூலம் மலேசியா வீரர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மூன்று தங்க இலக்கை அடைந்துள்ளது.
இன்று முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்கில் பேட்மிண்டன் அறிமுகமான பிறகு, ஆண்கள் ஒற்றையர் எஸ்யூ 5 (உடல் குறைபாடு) பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை சியா லீக் ஹூ படைத்தார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்கம் ஆகஸ்ட் 28 அன்று ஆண்கள் 72 கிலோகிராம் (கிலோ) பிரிவில் பவர் லிஃப்ட்டர் போனி புன்யாவ் கஸ்டினின் மூலம் வந்தது.
திங்களன்று (ஆகஸ்ட் 30) ஆண்கள் 107 கிலோ பிரிவில் போனியின் சக வீரர் ஜோங் யீ கீயும் புதன்கிழமை (செப்டம்பர் 1) கலப்பு தனிநபர் BC1 (உடல் குறைபாடு) பிரிவில் போசியா வீரர் செவ் வெய் லூன் மூலம் தேசிய அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றது.

