ஒலிம்பிக் ஈட்டியெறிதல்: இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
ஒலிம்பிக் ஈட்டியெறிதல்: இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
டோக்கியோ:
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கடைசி வாய்ப்பாக இருந்த ஈட்டியெறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா தனது முதல் தங்கத்தை பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற இறுதிபோட்டியில் அவருக்கு அடுத்து செக் குடியரசு வீரர் 86.67 தூரம் ஈட்டி எறிந்தார்,

முதல் தடவையிலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ரா மிக அதிக தூரம் ஈட்டி எரிந்து அனைவரையும் மலைக்க வைத்தார். அவருடைய அருகில் இதர வீரர்களால் நெருங்க முடியவில்லை.
அவர் அதிகபட்சமாக 87.58 தூரம் ஈட்டியை வீசினார். இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை அனைவரும் வாழ்த்துகின்றார்கள்
தொடர்புடைய செய்திகள்

