இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
கோலாலம்பூர்:
இளம் வயதில் குறிப்பாக தமது 26ஆவது வயதிலே முனைவர் பட்டத்தைப் பெற்று நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் முனைவர் மோகன தர்ஷினி.
ஜொகூர் மாநிலத்தின் கூலாய் பகுதியை சேர்ந்த மோகன தர்ஷினி, BIOFORMATICS துறையில் 2018ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
பிறகு, FAST TRACK - PhD என்ற திட்டம் மூலம் அவருக்கு பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கியது. இதனால் தமது முனைவர் பட்டப்படிப்பை அவர் வெற்றிகரமாக முடித்தார்.
தற்போது மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் பணியாற்றி வருகிறார். கூலாய் பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்க தொடங்கிய மோகன தர்ஷினி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.
மேலும், எஸ்.பி.எம் தேர்வில் எல்லா பாடங்களிலும் ஏக்கள் எடுத்து பெருமை சேர்த்தார். அறிவியல் துறையில் அதீத நாட்டம் கொண்ட அவர் மேற்கல்வியையும் அதிலே தொடர்ந்து இன்று வாகையும் கொண்டார்.
சாதனை புரிவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு மோகன தர்ஷினி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்

