யூரோ தகுதிச் சுற்று ஆட்டம்: ரொனால்டோவின் ஒற்றை கோல் போர்த்துக்கலை காப்பாற்றியது
யூரோ தகுதிச் சுற்று ஆட்டம்: ரொனால்டோவின் ஒற்றை கோல் போர்த்துக்கலை காப்பாற்றியது
ஐஸ்லாந்து:
யூரோ தகுதிச் சுற்று ஆட்டத்தில் ரொனால்டோவின் ஒற்றை கோல் போர்த்துக்கல் அணியை காப்பாற்றியுள்ளது.
லாகார்டால்ஸ்வல்லூர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியினர் ஐஸ்லாந்து அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துக்கல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
போர்த்துக்கல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார்.
மற்றோர் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்தானியோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றன.
மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரியா, லக்ஸம்பர்க், அல்பேனியா, ஹன்கேரி, சுலோவேக்கியா, நார்வே ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

