பரதன் கிண்ண கால்பந்துப் போட்டி: கோலாலம்பூர் அணி அபாரம்
பரதன் கிண்ண கால்பந்துப் போட்டி: கோலாலம்பூர் அணி அபாரம்
சிப்பாங்:
பரதன் கிண்ண கால்பந்துப் போட்டியில் கோலாலம்பூர் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பரதன் கிண்ண கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது.
கால்பந்து விளையாட்டில் அதிகமான விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டுக்கான போட்டியில் 12 அணிகள் களமிறங்கி உள்ளன.

இதன் லீக் ஆட்டங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின.
இதில் கோலாலம்பூர் அணி புத்ராஜெயா அணியை சந்தித்து விளையாடியது.
இவ்வாட்டம் பண்டார் பாரு சாலாக் திங்கி மினி அரங்கில் நடைபெற்றது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலாலம்பூர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் புத்ராஜெயா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
முன்னதாக இப் போட்டியை கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் பழனிசாமி, நிர்வாகிகள் பத்துமலை, கென்னத் கண்ணா உட்பட பலர் நேரடியாக கண்டு களித்தனர்.
இவ்வாண்டுக்கான பரதன் கிண்ணத்தை குறி வைத்து கோலாலம்பூர் அணியினர் போட்டியில் களமிறங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில் முதல் ஆட்டத்தில் கோலாலம்பூர் அனியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
அடுத்தடுத்த ஆட்டங்களில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை கோலாலம்பூர் அணியினர் மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக பயிற்றுநர் பாபு தலைமையில் உரிய பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்று கோலாலம்பூர் அணி நிர்வாகி பத்துமலை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

