images

கல்வியால் அனைத்தும் சாத்தியமே; தோட்ட தொழிலாளர் தம்பதிக்கு பிறந்த மகன் இன்று தலைசிறந்த பேராசிரியர்- டாக்டர் ராஜேஷ் ராமசாமி

image

கல்வியால் அனைத்தும் சாத்தியமே; தோட்ட தொழிலாளர் தம்பதிக்கு பிறந்த மகன் இன்று தலைசிறந்த பேராசிரியர்- டாக்டர் ராஜேஷ் ராமசாமி

பாடாங் செராய் : 

இந்த உலகத்தை மாற்றக்கூடிய ஆயுதம் ஒன்று இருக்கும் என்றால் அது கல்வியறிவு என்பது கருப்பு நிலா என்று வர்ணிக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் வாசகங்கள் ஆகும். அவ்வகையில் இந்த வாசகத்திற்குப் பொருத்தமானவராக டாக்டர் ராஜேஷ் ராமசாமி திகழ்கிறார்.

கெடா மாநிலத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ரப்பர் தொழிலாளி தம்பதியருக்கு  மகனாக பிறந்து தன் கல்வியால் இன்று நாடு போற்றும் தலைசிறந்த பல்கலைக்கழக பேராசிரியராக விளங்குகிறார். 

டாக்டர் ராஜேஷ் ராமசாமி தற்போது மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் மருந்தக மற்றும் சுகாதார அறிவியல் புலத்தின் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

கெடா பாடாங் செராய் பகுதியிலிருந்து வந்த இவர் கல்வியில் சிறந்து விளங்கி தன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

எனது பெற்றோர் அதிக நேரம் தோட்டத்தில் வேலை செய்தே நேரத்தைக் கழித்தாலும் அனைத்து பிள்ளைகளுக்கும் உணவையும் கல்வி கற்க இடத்தையும் ஏற்படுத்தி தந்தனர் என்று டாக்டர் ராஜேஷ் ராமசாமி குறிப்பிட்டார். 

மேலும், கல்வியின் அவசியத்தை எனது தந்தை எனக்கு உணர்த்திக்கொண்டே இருப்பார். அத்துடன் எனக்கு தேர்வு கட்டணத்தைச் செலுத்த எனது தாயார் அவரின் நகைகளை விற்றார் என்று உருக்கத்துடன் சொன்னார். 

பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தான் என்னை இளங்கலை வரை சென்று BIOMEDICAL SCIENCE துறையில் பட்டம் பெற உதவியது என்று பெருமையுடன் தெரிவித்தார். 

என்னதான் என் பெற்றோர் கல்வி கற்கவில்லை என்றாலும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது கல்வியில் சிறந்து விளங்க அயராது பாடுபட்டனர். அவர் தியாகத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று அவர் திட்டவட்டமாக சொன்னார். 

மேலும், பிள்ளைகளின் தேவையறிந்து அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

மேலும், எந்தத் துறையில் அவர்கள் விருப்பம் கொண்டுள்ளார்களோ அதற்கு அவர்களை தயாராக்க வேண்டும் என்று மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான டாக்டர் ராஜேஷ் ராமசாமி திட்டவட்டமாக சொன்னார்.

- மவித்திரன்

பகிர்
+ - reset